/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை
/
பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை
ADDED : மே 13, 2024 09:49 PM
திருவள்ளூர்: செவ்வாப்பேட்டை அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர்கள் சேர, வரும் 24 கடைசி நாளாகும்.
செவ்வாப்பேட்டை அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் பாஸ்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசு அனைத்து பலவகைத் தொழில் நுட்ப கல்லுாரிகளில், முதல் மற்றும் நேரடி இரண்டாமாண்டு பட்டயப்படிப்பிற்கு https://www.tnpoly.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு விண்ணப்பிக்க இயலாதோர், மாவட்ட சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரி சேவை மையமாக செயல்படுகிறது.
முதல் ஆண்டு பட்டய சேர்க்கைக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேரடி இரண்டாமாண்டு பட்டய சேர்க்கைக்கு மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பதிவுக் கட்டணம் 150 ரூபாய் இணையதளம் வாயிலாக செலுத்தலாம்.
நேரடி இரண்டாமாண்டு சேர்க்கை, கடந்த 6ம் தேதி துவங்கியது. வரும், 20க்குள் விண்ணப்பிக்கலாம். முதலாமாண்டு சேர்க்கைக்கு மே 24ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
அனைத்து தகவல், வழிகாட்டி மற்றும் தொலைபேசி எண்கள் https://www.tnpoly.in என்ற இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
மேலும், விபரங்களுக்கு 94449 42640 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

