/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாரிசு சான்றிதழ் கோரி மண்டியிட்டு மனு அளித்த பெண்
/
வாரிசு சான்றிதழ் கோரி மண்டியிட்டு மனு அளித்த பெண்
ADDED : செப் 16, 2024 09:56 PM

திருவள்ளூர்: வாரிசு சான்றிதழ் கேட்டு, கண்ணீர் மல்க மண்டியிட்டு பெண் ஒருவர் மனு அளித்தார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மனுவை, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார் பெற்றார்.
அரக்கோணம் தாலுகா, மங்கம்மாபேட்டையைச் சேர்ந்த லதா என்பவர், தன் கணவர் இறந்து விட்டதால், வாரிசு சான்றிதழ் கேட்டு பலமுறை மனு அளித்தும் நிராகரிக்கப்பட்டதாக, கண்ணீருடன் மனு அளித்தார்.
இதுகுறித்து, லதா கூறியதாவது:
எனக்கும், திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பத்தைச் சேர்ந்த ஜெகன்நாதனுக்கும் திருமணம் நடந்தது.
என் கணவர் கடந்த 2022ல் இறந்து விட்டார். அவரது இறப்புச் சான்றிதழுடன் ஆர்.கே.பேட்டை தாசில்தாரிடம் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும், நிராகரித்து விட்டனர். எனவே, எனக்கு வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

