/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குறைந்தழுத்த மின் வினியோகம் மோட்டார் இயக்க முடியாமல் அவதி
/
குறைந்தழுத்த மின் வினியோகம் மோட்டார் இயக்க முடியாமல் அவதி
குறைந்தழுத்த மின் வினியோகம் மோட்டார் இயக்க முடியாமல் அவதி
குறைந்தழுத்த மின் வினியோகம் மோட்டார் இயக்க முடியாமல் அவதி
ADDED : ஏப் 29, 2024 11:19 PM
திருத்தணி : திருத்தணி அடுத்த மாமண்டூர் துணை மின்நிலையத்தில் இருந்து மாமண்டூர், அருங்குளம், லட்சுமாபுரம், குன்னத்துார், அருங்குளம் கண்டிகை, நாபளூர் உட்பட, 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த கிராமங்களில் அதிகளவில் விவசாயம் செய்து மக்கள் தங்களது வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இங்கு, அதிகளவில் நெல், காய்கறி, பூ மற்றும் வேர்க்கடலை போன்ற பயிர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மாமண்டூர் துணை மின்நிலையத்தில் இருந்து விவசாய மின் இணைப்புக்கு சீரான மின்சாரம் வினியோகம் செய்வதில்லை.
மேலும், குறைந்த அழுத்த மின்சாரம் வழங்கி வருவதால், விவசாயிகள் தங்களது மின் மோட்டார்களை இயக்க முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர்.
சில நேரத்தில் விவசாய மின் இணைப்புகளுக்கு உயரழுத்த மின்சாரம் வினியோகம் செய்வதால், மின் மோட்டார்கள் பழுதடைகின்றன. இதனால், விவசாயிகள் பயிருக்கு குறித்த நேரத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்கு முடியாமல் கடும் சிரமப்படுகின்றனர்.
தற்போது, கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சா விட்டால் கருகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
எனவே, மின்வாரிய உயரதிகாரிகள் குறைந்தழுத்த மின் வினியோகத்தை சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுத்து, சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

