/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கெட்டுப்போன இறைச்சி 28 கிலோ பறிமுதல்
/
கெட்டுப்போன இறைச்சி 28 கிலோ பறிமுதல்
ADDED : செப் 13, 2024 12:12 AM

எம்.ஜி.ஆர்., நகர்:கோடம்பாக்கம் மண்டலம், கே.கே., சாலையில் எம்.ஜி.ஆர்., நகர் மார்க்கெட் உள்ளது. இங்கு, ஆடுகள் வெட்டப்பட்டு, சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்கப்படுவதாகவும், புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சேர்ந்து, நேற்று காலை சோதனை மேற்கொண்டனர். இதில், எம்.ஜி.ஆர்., நகர் மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில், 'ப்ரீசர்'ரில் வைக்கப்பட்டிருந்த 28 கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
தவிர, சட்ட விரோதமாக அங்கு ஆடு வெட்டப்பட்டதும் தெரியவந்தது. அங்கிருந்த 'சிசிடிவி' கேமரா காட்சி வாயிலாக, அதிகாரிகள் இதை கண்டறிந்தனர்.
அனுமதியில்லாத இடத்தில் வெட்டியதற்காகவும், சுகாதாரமாக வைக்காததற்காகவும், நல்ல முறையில் இருந்த 40 கிலோ ஆட்டு இறைச்சியையும், அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

