/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மைக்செட்காரர் கொலை; கிராம மக்கள் மறியல்: சிறார்கள் கைது
/
மைக்செட்காரர் கொலை; கிராம மக்கள் மறியல்: சிறார்கள் கைது
மைக்செட்காரர் கொலை; கிராம மக்கள் மறியல்: சிறார்கள் கைது
மைக்செட்காரர் கொலை; கிராம மக்கள் மறியல்: சிறார்கள் கைது
ADDED : டிச 29, 2025 06:49 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே காக்கநல்லூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் மாரியப்பன் 51.
இவர் மைக்செட் நடத்தி வந்தார். நேற்று முன் தினம் இரவு டூவீலரில் ஊருக்கு சென்றபோது ஒரு கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது. இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. விக்கிரமசிங்கபுரம் போலீசார் விசாரித்தனர்.
அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல விடாமல் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்டதாக அதே பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டி 19, மற்றும் 18 வயதுக்குட்பட்ட மூன்று சிறார்களை போலீசார் கைது செய்தனர்.