/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக 'உள்ளடி': சொந்த கட்சிக்குள் குழப்பம்

UPDATED : ஏப் 10, 2024 04:45 PM
ADDED : ஏப் 10, 2024 03:09 PM

திருநெல்வேலி: திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ்க்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நாங்குநேரி காங்கிரசார் கட்சி மேலிடத்துக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளனர்.
திருநெல்வேலியில் தி.மு.க., கூட்டணி சார்பில், கன்னியாகுமரியைச் சேர்ந்த ராபர்ட் புரூஸ் போட்டியிடுகிறார். கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு உள்ளது. இந்நிலையில் நாங்குநேரி காங்கிரசார் கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி தொகுதியில் புரூஸ் தோற்றால் நாங்கள் பொறுப்பல்ல. எங்கள் தொகுதியில் ராபர்ட் புரூஸ்க்கு தேர்தல் பணி நடைபெறவில்லை. ராபர்ட் புரூஸ் தோற்க நாங்குநேரி எம்.எல்.ஏ., ரூபி மனோகரன் வேலை பார்க்கிறார். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ரூபி மனோகரன் மறுப்பு
நாங்கு நேரியில் தேர்தல் பணி நடைபெறவில்லை என்ற புகாருக்கு ரூபி மனோகரன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் நிருபர்கள் சந்திப்பில், ‛‛ நாங்குநேரியில் சுவர் விளம்பரம், பிட் நோட்டீஸ், தெரு பிரச்சாரம் நடைபெறுகிறது. ராபர்ட் புரூஸ் வெற்றி பெற அர்ப்பணிப்புடன் வேலை பார்க்கிறேன். தனக்கு எதிரான கோஷ்டி திட்டமிட்டு அவதூறுகளை பரப்பி வருகிறது' என தெரிவித்தார்.