/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லை பஸ் ஸ்டாண்டை மூட மா.க., வாரியம் பரிந்துரை
/
நெல்லை பஸ் ஸ்டாண்டை மூட மா.க., வாரியம் பரிந்துரை
ADDED : செப் 12, 2025 01:32 AM
திருநெல்வேலி:சுற்றுச்சூழல் அனுமதி பெறாத திருநெல்வேலி ஜங்ஷன் புதிய பஸ் ஸ்டாண்டை மூட, மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் பரிந்துரை செய்துள்ளார்.
திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் கட்டடம், 2018-ல் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், 85 கோடி ரூபாய் மதிப்பில் அடுக்குமாடிகளுடன் புதிதாக கட்டப்பட்டு, 2024 பிப்., 18-ல் துணை முதல்வர் உதயநிதியால் திறக்கப்பட்டது.
கட்டடத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை. இது குறித்து சமூக ஆர்வலர் எஸ்.பி. முத்துராமன் புகாரில், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கிருஷ்ணபாபு குழுவினர், ஆக., 26ல் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, கிருஷ்ணபாபு, சென்னை மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமையகத்திற்கு அனுப்பிய அறிக்கையில், 'சுற்றுச்சூழல் முன் அனுமதியின்றி கட்டப்பட்ட ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டை மூட மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்' என, பரிந்துரைத்துள்ளார். மாநகராட்சி தரப்பில், 'அனுமதி பெறுவதற்கான நடவடிக்கை நடைபெற்று வருகிறது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.