ADDED : செப் 13, 2025 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி அருகே ஓய்வுபெற்ற நீதிமன்ற ஊழியரின் வீட்டில் மர்ம நபர்கள் தங்க நாணயங்கள், பணம், பொருட்களை திருடிச் சென்றனர்.
சிவந்திபட்டி அருகே முத்துார் மாடர்ன் சிட்டியைச் சேர்ந்த ஆனந்தராஜன் 66. நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் இந்த பகுதியில் புதிதாக வீடு கட்டியிருந்தார். செப்., 10 காலை வீட்டுக்கு வந்த போது கதவின் பூட்டு உடைக்கப் பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ. 32 ஆயிரம் மதிப்புள்ள 1 கிராம், 4 கிராம் தங்க நாணயங்கள், ரூ.1000, பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
போலீசார் விசாரிக் கின்றனர்.