/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பெண்ணை 'உறவுக்கு' கட்டாயப்படுத்தி தாக்குதல் கராத்தே மாஸ்டர் கைது
/
பெண்ணை 'உறவுக்கு' கட்டாயப்படுத்தி தாக்குதல் கராத்தே மாஸ்டர் கைது
பெண்ணை 'உறவுக்கு' கட்டாயப்படுத்தி தாக்குதல் கராத்தே மாஸ்டர் கைது
பெண்ணை 'உறவுக்கு' கட்டாயப்படுத்தி தாக்குதல் கராத்தே மாஸ்டர் கைது
ADDED : செப் 10, 2025 03:15 AM

திருநெல்வேலி:திருநெல்வேலியில் பெண்ணை பாலுறவுக்கு கட்டாயப்படுத்தி அழைத்து தாக்கிய கராத்தே மாஸ்டர் அப்துல் வஹாப் 37, கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே இஸ்திமாநகரை சேர்ந்தவர் மஜீத். டீக்கடை ஊழியர். இவரதுமனைவி அலி பாத்திமா 33. இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அலி பாத்திமா தனது இரண்டு குழந்தைகளையும் சுத்தமல்லி பொன்விழா நகரில் அப்துல் வஹாப் 37, நடத்தி வரும் கராத்தே மையத்தில் பயிற்சிக்கு அனுப்பி வந்தார். தினமும் கராத்தே மையத்திற்கு சென்று வந்ததால் அப்துல் வஹாப்புடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை மஜீத் கண்டித்தார். எனவே அலி பாத்திமா, அப்துல் வஹாப் உடன் பேசுவதை நிறுத்தினார். இதனால் ஆத்திரமுற்ற அப்துல் வஹாப், சம்பவத்தன்று அலி பாத்திமாவின் வீட்டுக்குள் சென்று, அவதுாறு வார்த்தைகள் பேசி, தான் கூப்பிட்டால் வரவேண்டும் என தாக்கினார்.காயமுற்ற அலி பாத்திமா புகாரின் பேரில் சுத்தமல்லி போலீசார் அப்துல் வஹாப் மீது பெண் வன்கொடுமை உட்பட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
அப்துல்வஹாப், கோடீஸ்வரன் நகர், கே.டி.சி. நகரில் கராத்தே மையம், துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.
அங்கும் பெண்களிடம் இவ்வாறு தகாத முறையில் நடந்துள்ளாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.