/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கோயில் குளத்தில் மீன்கள் இறப்பு
/
கோயில் குளத்தில் மீன்கள் இறப்பு
ADDED : செப் 11, 2025 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் கோயில், காந்திமதி அம்மன் சன்னதி அருகே பொற்றாமரை குளம் உள்ளது. இங்கு எப்போதும் மீன்கள் வசிக்கும். சில ஆண்டுகளுக்கு முன் துாத்துக்குடி மீன்வளக்கல்லுாரியினர் இந்த குளத்தை பராமரித்தனர். சமீப காலமாக பராமரிப்பின்றி உள்ளது.
இதனால் குளத்தில் நேற்று காலை மீன்கள் இறந்து கிடந்தன. கோயில் நிர்வாகத்தினர் அதனை அள்ளி அப்புறப்படுத்தினர். மீன்கள் இறப்பு மற்றும் துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.