/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மிகவும் மகிழ்ச்சியான நாள் நயினார் நாகேந்திரன் பேட்டி * நயினார் நாகேந்திரன் பேட்டி

ADDED : மே 08, 2025 02:14 AM
திருநெல்வேலி:''ஆபரேஷன் சிந்துார் தாக்குதல் நடந்த இந்த நாள் மிகவும் மகிழ்ச்சியான நாள்,'' என, திருநெல்வேலியில் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இந்தியா சுதந்திரமடைந்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியைவிட இன்றைய நாள் மிகுந்த மகிழ்ச்சியானதாகும். காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும். பிரதமர் மோடி ஒரு தனிநபர் அல்ல; 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையாக திகழ்கிறார். 9 இடங்களில் தீவிரவாதிகள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர்.
இதற்காக தமிழக பா.ஜ.,சார்பில் பிரதமருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டுமெனக் கூறியதை பாராட்டுகிறேன். தேச ஒற்றுமை குறித்து தமிழக முதல்வர் பேசியதற்கும் நன்றி தெரிவிக்கிறேன். எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் தேசபற்று உணர்வு இருக்க வேண்டும். 2026 ல் நடக்க உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ., கூட்டணியினர் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷனை தொடங்க உள்ளோம். நீட் தேர்வு எழுதும் மாணவிகளை 'தலைவிரி கோலமாக' அனுப்புவது தேவையற்றது. இவ்வாறு கூறினார்.