/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நள்ளிரவில் மணல் கடத்தல் நபரை நான்கு மணி நேரம் வீட்டில் காத்திருந்து கைது செய்த நாங்குநேரி ஏ எஸ் பி பிரசன்ன குமார்

ADDED : ஆக 30, 2024 09:13 PM

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே வெங்கட்ராயபுரத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு கும்பல் ஜேசிபி மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டது. நள்ளிரவில் தகவல் அறிந்த நாங்குநேரி ஏ எஸ் பி பிரசன்னகுமார் போலீஸ் படையினருடன் அங்கு சென்றார். அந்த கும்பல் ஜேசிபி மற்றும் டூவீலர்களை விட்டுவிட்டு தப்பி சென்றனர். தப்பிச்சென்ற மணல் கடத்தல் கும்பல் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது. ஏஎஸ்பி பிரசன்னகுமார் சாத்தான்குளத்தில் கங்கைஆதித்தன் என்பவரது வீட்டில் சென்று அவரை தேடினார். ஆனால் அவரது குடும்பத்தினரோ பக்கத்து வீட்டில் வசிப்பவர்களோ அவரை காட்டிக் கொடுக்க விரும்பவில்லை. வீட்டுக்குள் இருந்த கங்கை ஆதித்தனை வெளியே விடாமல் கதவை பூட்டி வைத்துக் கொண்டனர். அங்கிருந்தவர்கள் ஏ எஸ் பி பிரசன்னகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மணல் கடத்தல் கும்பல் சேர்ந்த நபர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர் இவ்வாறு போலீசார் கைது செய்ய வந்தால் வீட்டில் உடைகளை அவிழ்த்து போட்டு விட்டு நிர்வாணமாக நின்று விடுவார் எனவும் குற்றச்சாட்டு உள்ளது. இருப்பினும் நான்கு மணி நேரமாக காத்திருந்து ஏ எஸ் பி பிரசன்ன குமார் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.