/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கார் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பலி: மூவர் காயம்
/
கார் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பலி: மூவர் காயம்
கார் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பலி: மூவர் காயம்
கார் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பலி: மூவர் காயம்
ADDED : டிச 30, 2024 06:43 AM

மூணாறு : மாங்குளம் அருகே பைசன்வாலி வளைவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி பின்னோக்கி சென்று காரில் மோதிய விபத்தில் அசாமைச் சேர்ந்த தொழிலாளி பலியான நிலையில் தமிழகத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உட்பட மூன்று பேர் பலத்த காயம் அடைந்தனர்.
மூணாறு அருகே மாங்குளம் ஊராட்சியில் ஆனக்குளம் பகுதியில் இருந்து ரோட்டின் ஓரம் அமைக்கப்படும் தடுப்பு இரும்புகள் உள்பட பல்வேறு பொருட்களை ஏற்றிய லாரி மாங்குளத்தை நோக்கி வந்தது.
அசாம் மாநிலத்தை சேர்ந்த லியோன் 38, லாரியை ஓட்டினார். அதே மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஜெய்கோபால் மண்டல் 31, உடனிருந்தார்.
மாங்குளம் அருகே பைசன்வாலி வளைவில் கடுமையான ஏற்றத்தில் லாரி வந்த போது திடிரென கட்டுப்பாட்டை இழந்து, பின்னோக்கிச் சென்றது.
அப்போது அதே பகுதியில் தமிழகம் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் வாகனம் ஓடையில் சிக்கி இருந்தது. அதனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் பின்னோக்கி வந்த லாரி, காரில் பலமாக மோதியது.
இந்த விபத்தில் ஜெய்கோபால் மண்டல் 2 வாகனங்களுக்கும் இடையே சிக்கி இறந்தார். லாரி டிரைவர் லியோன், காரில் இருந்த சுற்றுலாப் பயணிகள் பானு 36, விஜயசாந்தி 43, ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்கள் மூவரும் அடிமாலி தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்கு பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

