/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மகளிர் சுய உதவி குழு தலைவி தற்கொலை
/
மகளிர் சுய உதவி குழு தலைவி தற்கொலை
ADDED : செப் 19, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: கம்பம் பசும்பொன் முத்துராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் சசிக்குமார் 32, கூலி வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி பிரித்தா தேவி 28, இவர் இங்குள்ள மகளிர் சுய உதவிக் குழு தலைவியாக இருந்துள்ளார். மைக்ரோ பைனான்ஸ் ஒன்றில் கடன் பெற்று குழுவில் உள்ளவர்களுக்கு கடன் வழங்கியுள்ளார். கடன் பெற்றவர்கள் திருப்பி செலுத்தவில்லை. மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தினர், பிரித்தா தேவியை பணத்தை செலுத்த வலியுறுத்தியுள்ளனர்.
இதனால் மனம் உடைந்த பிரித்தா தேவி நேற்று முன்தினம் வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கம்பம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

