/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தையல் கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி பெண்கள் மனு
/
தையல் கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி பெண்கள் மனு
தையல் கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி பெண்கள் மனு
தையல் கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி பெண்கள் மனு
ADDED : மார் 19, 2024 05:45 AM

தேனி : தையல் கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி மகளிர் தையல் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் தேனி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், கலெக்டர் அலுவுலகத்த்தில் மக்கள் குறைதீர் முகாம் நடக்கவில்லை.
அதற்கு பதிலாக மனு அளிக்க வந்தவர்கள் அதனை மனு பெட்டியில் செலுத்த அறிவுறுத்தப்பட்டனர். அப் பெட்டி கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்தது.
அதன் அருகில் அலுவலக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழிகாட்டினர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த வந்த மக்கள் குறைதீர் கூட்டம் நடக்காததால் மனுக்களை மனுப்பெட்டியில் போட்டுச்சென்றனர்.
மாவட்டத்தில் உள்ள தையல் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் நிர்வாகி முருகேஸ்வரி தலைமையில் மனு அளிக்க வந்தனர். அவர்கள் மனுவில், 'சமூக நலத்துறை கீழ் இயங்கும் மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தில் 1500க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றோம். நாங்கள் பள்ளி மாணவர்களுக்கான சீருடைகளை தைத்து வழங்குகிறோம்.
இதுவரை குறைந்த சம்பளத்தில் இலவச சீருடை தைத்து வழங்கினோம்.
இந்தாண்டு முதல் கேன்வாஷ் வைத்தல், நைலான்பட்டன் வைத்தல் உள்ளிட்ட கூடுதல் பணிகள் வழங்கப்பட்டுள்ளது. தையற்கூலியாக ஒரு சட்டை ரூ.23 மட்டும் வழங்கப்படுகிறது. மேலும் பள்ளிகளில் நேரடியாக சென்று அளவு எடுத்து தைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறைந்த ஊதியத்தில் பிற இடங்களுக்கும் சென்று அளவு பதிவு செய்ய இயலாத நிலை உள்ளது. மூலப்பொருட்களின் விலையும் கூடுதலாக உள்ளது. கூலியை உயர்த்தி வழங்க வேண்டும்.
அளவு எடுத்த தைக்க மீண்டும் வலியுறுத்தினால் ரோடு மறியலில் ஈடுபடுவோம்,' என இருந்தது.

