/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பமெட்டு ரோட்டை கையகப்படுத்துவது எப்போது ; நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை தேவை
/
கம்பமெட்டு ரோட்டை கையகப்படுத்துவது எப்போது ; நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை தேவை
கம்பமெட்டு ரோட்டை கையகப்படுத்துவது எப்போது ; நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை தேவை
கம்பமெட்டு ரோட்டை கையகப்படுத்துவது எப்போது ; நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை தேவை
ADDED : அக் 09, 2024 05:30 AM
கம்பம்: கம்பமெட்டு ரோடு இன்னமும் வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் அதனை முறைப்படி கையகப்படுத்தும் நடவடிக்கைகளை நெடுஞ்சாலைத்துறை எடுக்க வேண்டும் என மக்கள் கோரியுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவை இணைக்க போடிமெட்டு, கம்பமெட்டு மற்றும் குமுளி மலைப்பாதைகள் உள்ளன. இதில் போடிமெட்டு தேசிய நெடுஞ்சாலை எண் 85 ன் கீழும், குமுளி ரோடு தேசிய நெடுஞ்சாலை எண் 183 ன் கீழும் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே இந்த இரு ரோடுகளும் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இரு மாநில இணைப்பு ரோடுகள் தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பது பொது விதியாகும்.
ஆனால் கம்பமெட்டு ரோடு மட்டும் இன்னமும் மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கம்பத்திலிருந்து 13 கி.மீ. தூரத்தில் கேரளா உள்ளது. இதில் 6 கி.மீ. மட்டுமே மலைப்பாதை மட்டுமே வனத்துறை கட்டுப்பாட்டில் வருகிறது.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஏன் ரோட்டை கையகபடுத்தவில்லை என விசாரிக்கையில் , கம்பமெட்டு ரோடு இன்னமும் வனத்துறை வசம் உள்ளது.
முறைப்படி நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்படவில்லை, என்றனர். தற்போது மாநில நெடுஞ்சாலைத்துறை 6 கி.மீ. மலைப்பாதையை வனத்துறையிடமிருந்து பெற தேவையான நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு முறையும் ரோடு பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது, தங்களிடம் அனுமதி பெற வேண்டும் என வனத்துறை கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக வனத்துறையில் விசாரித்த போது, பொதுமக்கள் பயன்படுத்த 50 ஆண்டுகளுக்கும் முன் போடப்பட்ட ரோட்டை பயன்படுத்தி கொள்ளலாம்.
தற்போது இருக்கும் ரோட்டை அகலப்படுத்த முடியாது. அதற்கு அனுமதி இல்லை.
கடிதம் கொடுத்தால் மத்திய அரசு தான் முடிவெடுக்க முடியும். எனவே ரோட்டை பயன்படுத்திக் கொள்ள எந்த பிரச்னையும் இல்லை. பராமரிப்பு பணி செய்து கொள்ளலாம். முறையாக நெடுஞ்சாலைத் துறைக்கு ரோடு இருக்கும் இடத்தை வழங்கவில்லை என்பது உண்மை என்கின்றனர்.

