/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணைக்கு நீர் வரத்து இன்றி குறையும் நீர்மட்டம்
/
வைகை அணைக்கு நீர் வரத்து இன்றி குறையும் நீர்மட்டம்
வைகை அணைக்கு நீர் வரத்து இன்றி குறையும் நீர்மட்டம்
வைகை அணைக்கு நீர் வரத்து இன்றி குறையும் நீர்மட்டம்
ADDED : மே 02, 2025 07:02 AM
ஆண்டிபட்டி: நீர் வரத்து இல்லாத வைகை அணையில் கடந்த சில நாட்களாக நீர் மட்டமும் தொடர்ந்து குறைகிறது.
வைகை அணைக்கு பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் நீர் வரத்து கிடைக்கும். கடந்த சில வாரங்களாக சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில் மழைக்கான சூழலும் இல்லை. பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி வீதம் திறக்கப்படும் நீர் வைகை அணைக்கு கிடைப்பதில்லை. வருஷநாடு மூல வைகை ஆறு, போடி கொட்டக்குடி ஆறுகளும் வறண்டதால் வைகை அணைக்கான நீர் வரத்து முற்றிலும் இல்லை. வைகை அணையில் இருப்பில் உள்ள நீர் மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கன அடி நீர் தொடர்ந்து வெளியேறுகிறது. வெயிலின் தாக்கத்தால் அணையில் நீர் ஆவியாதலும் அதிகமாகிறது. ஏப்ரல் 23 ல் 56.20 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 55.71அடியாக குறைந்துள்ளது. அணை உயரம் 71 அடி. அணைக்கான நீர் வரத்து ஏதுமில்லை. மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து இன்னும் சில நாட்களில் நீர் திறக்கப்பட உள்ளது. இதனால் அணை நீர்மட்டம் இன்னும்குறையும்.

