/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
/
பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : ஜூலை 25, 2025 01:30 AM
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து 4 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக முல்லைப் பெரியாறு அணையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2131 கன அடியில் இருந்து 4001 கன அடியாக அதிகரித்தது.
அணையின் நீர்மட்டம் சற்று உயர்ந்து 130.90 அடியானது. (மொத்த உயரம் 152 அடி). தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் முதல் போக நெல் சாகுபடிக்காக வினாடிக்கு 1867 கன அடி திறக்கப்பட்டுள்ளது.
ரூல்கர்வ் விதிமுறைப் படி ஜூலை 31 வரை அணையில் 137 அடி வரை தேக்கலாம். தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின்நிலையத்தில் நான்கு ஜெனரேட்டர்களில் முழு அளவில் 168 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

