/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குமுளி மலைப்பாதையில் செல்வோருக்கு எச்சரிக்கை
/
குமுளி மலைப்பாதையில் செல்வோருக்கு எச்சரிக்கை
ADDED : ஜூலை 25, 2025 03:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: பலத்த காற்று வீசுவதால் குமுளி மலைப்பாதையில் டூவீலரில் செல்பவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.
தற்போது பலத்த காற்றுடன் குமுளி, கூடலுார் உள்ளிட்ட பகுதியில் மழை பெய்து வருகிறது.
லோயர்கேம்பில் இருந்து குமுளி வரை செல்லும் 6 கி.மீ., துார மலைப்பாதை பல ஆபத்தான வளைவுகளைக் கொண்டதாக உள்ளது. மேலும் சாய்ந்து விழும் நிலையில் மரங்களும் உள்ளது. காற்று பலமாக வீசுவதால் மரங்கள் சாய்ந்து விழும் ஆபத்து உள்ள நிலையில் டூவீலரில் செல்பவர்கள் எச்சரிக்கையுடனும் வேகத்தை குறைத்து செல்லவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

