/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தீபாவளி பொருட்கள் வாங்க தேனியில் குவிந்த பொதுமக்கள் நெரிசலில் சிக்கி தவித்த வாகனங்கள்

ADDED : அக் 31, 2024 03:05 AM

தேனி: தீபாவளியை முன்னிட்டு பொருட்கள் வாங்க பொதுமக்கள் தேனி கடைவீதிகளில் குவிந்தனர். இதனால் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவித்தன.
இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் புத்தாடைகள், மளிகை பொருட்கள், இனிப்புகள் உள்ளிட்டவை வாங்குவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தேனி நகர்பகுதியில் குவிந்தனர். இதனால் பகவதியம்மன் கோயில் தெரு, கடற்கரைநாடார் தெரு, சுப்பன்செட்டி தெரு, பெரியகுளம் ரோடு, எடமால்தெரு, மதுரைரோட்டில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.நகர்பகுதியில் தனி பார்க்கிங் வசதி இல்லாததால் பலரும் ரோட்டில் இடையூறாக வாகனங்களை நிறுத்தி சென்றனர்.
இதனால் மதுரை ரோடு, பெரியகுளம் ரோட்டில் வாகனங்கள் போக்கு வரத்து நெரிசலில் சிக்கி தவித்தன. கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், சி.சி.டி.வி., கேமராக்கள் மூலமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.