ADDED : டிச 17, 2025 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: குமுளி எஸ்.ஐ., கருப்பையா தலைமையிலான போலீசார் லோயர்கேம்ப் பென்னி குவிக் மண்டபம் அருகே ரோந்து சென்றனர். அங்கு குச்சனுார் வ.உ.சி., நகர் கோவிந்தராஜ் 47,யிடம் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள 60 லாட்டரி சீட்டுக்களை விற்பனைக்காக வைத்திருந்தார். போலீசார் கோவிந்தராஜை கைது செய்தனர்.
தேனி: கண்டமனுார் எஸ்.ஐ., ஜான்செல்லத்துரை தலைமையிலான போலீசார் குப்பிநாயக்கன்பட்டி பஸ் ஸ்டாப் அருகே ரோந்து சென்றனர். அப்போது லட்சுமிபுரம் கிழக்குத்தெரு மயில்ராஜ் 70, லாட்டரி சீட்டுக்கள் விற்ற ரூ.2660,மேலும் 55 லாட்டரி சீட்டுக்கள் வைத்திருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

