/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பமெட்டு ரோடு வழியாக சபரிமலை வாகனங்கள் அனுமதிக்கு தாமதமாகும்
/
கம்பமெட்டு ரோடு வழியாக சபரிமலை வாகனங்கள் அனுமதிக்கு தாமதமாகும்
கம்பமெட்டு ரோடு வழியாக சபரிமலை வாகனங்கள் அனுமதிக்கு தாமதமாகும்
கம்பமெட்டு ரோடு வழியாக சபரிமலை வாகனங்கள் அனுமதிக்கு தாமதமாகும்
ADDED : டிச 13, 2025 05:36 AM
கம்பம்: சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள் கம்பமெட்டு ரோட்டில் திருப்பி விடுவது கால தாமதம் ஆகும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆண்டுதோறும் கார்த்திகையில் சபரிமலை ஐயப் பன் கோயிலிற்கு பக்தர்கள் மாலை அணிந்து செல்வது வழக்கம். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா , தெலுங்கானா, புதுச்சேரி என தென் மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தை மாதம் வரை செல்வார்கள்.
மகர விளக்கு மண்டல பூஜை காலங்களில் குமுளி மலைப் பாதையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் பல ஆண்டுகளுக்கு முன்பே சபரிமலை செல்லும் வாகனங்கள் கம்பமெட்டு ரோட்டில் திருப்பி விடப்படும்.
சபரிமலையில் இருந்து திரும்பும் வாகனங்கள் குமுளி ரோட்டில் செல்லவும் அனுமதிக்கப்பட்டது.
இதனால் ஓரளவிற்கு போக்குவரத்து நெரிசல் குறைந்தது. கடந்தாண்டு டிச . 20 ல் ஒரு வழிப்பாதை அமல்படுத்தினர். இந்தாண்டு எப்போது ஒரு வழிப்பாதை அமல்படுத்த உள்ளனர் என்பது தெரியவில்லை.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் , இந்தாண்டு வாகன போக்குவரத்து கடந்தாண்டை ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது. மேலும் கேரள அரசு கூறும் போது ஒரு வழிப்பாதையை அமல்படுத்துங்கள் என்று தமிழக அரசிடம் கோரியுள்ளனர். எனவே இந்தாண்டு ஒருவழிப்பாதை அமல்படுத்துவது கால தாமதமாகலாம்.
ஜனவரி முதல் வாரம் ஆகி விடலாம் என்கின்றனர். மேலும் கம்பமெட்டு ரோடு குண்டும், குழியுமாக இருப்பதாலும் அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்.

