/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மின் வழிப்பாதைகள் புனரமைக்கும் பணிகளை விரைந்து துவக்க வேண்டும்
/
மின் வழிப்பாதைகள் புனரமைக்கும் பணிகளை விரைந்து துவக்க வேண்டும்
மின் வழிப்பாதைகள் புனரமைக்கும் பணிகளை விரைந்து துவக்க வேண்டும்
மின் வழிப்பாதைகள் புனரமைக்கும் பணிகளை விரைந்து துவக்க வேண்டும்
ADDED : செப் 27, 2024 07:28 AM
கம்பம்: தேனி மாவட்டத்தில் 23 மின் வழிப்பாதைகளை (Feeder) புனரமைக்க மின் பகிர்மான புனரமைப்பு வழங்கல் திட்டத்தின் கீழ் ரூ.50 கோடி ஒதுக்கீட்டிற்கான பணிகளை விரைந்து துவக்க வாரியம் முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கிராமங்களில் வேளாண் மின் இணைப்பும், குடியிருப்பு மின் இணைப்புகளும் ஒரே டிரான்ஸ்பார்மர் மூலம் வழங்கப்படுகிறது. வேளாண் இணைப்புகளுக்கு தினமும் 18 மணிநேரமும், வீடுகளுக்கு 24 மணி நேரமும் சப்ளை இருக்க வேண்டும். ஒரே டிரான்ஸ்பார்மர் என்பதால் வேளாண் இணைப்புகளுக்கு சப்ளையை நிறுத்தும் போது, குடியிருப்புகளுக்கும் மின் சப்ளையை நிறுத்த வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை தவிர்க்க மத்திய அரசு ஆர்.டி.எஸ்.எஸ் (Revamped Service Sector Scheme) என்ற திட்டத்தை அறிவித்தது. இது 2021 - 2026 வரையிலான ஐந்தாண்டு திட்டம். இத் திட்டத்திற்கு ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்து 758 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
திட்டத்தின் ஒரு பகுதியாக பிரிபெய்டு ஸ்மார்ட் மீட்டர்கள் 20.46 கோடியும், பீடர்களுக்காக 1.98 கோடியே 98 லட்சம் மீட்டர்களும் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது.
கிராமங்களில் வேளாண், குடியிருப்பு இணைப்புகளை தனித் தனியாக பிரித்து மின் சப்ளை வழங்க இத் திட்டம் உதவும். லோக்சபா தேர்தலுக்கு முன் துவங்க வேண்டிய பணி தேர்தல் அறிவிக்கப்பட்டதால் நிறுத்தப்பட்டது. தேர்தல் முடிந்து பல மாதங்களாகியும் திட்டம் துவங்க வில்லை.
இப் பணிகளை மேற்கொள்ள வாரியம் முன் வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து மின்வாரியத்தில் விசாரித்த போது, தேனி மாவட்டத்தில் துணை மின் நிலையங்களில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு தனி மின் வழிப்பாதை (Feeder) இருக்கும். ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் 3 முதல் 5 பீடர்கள் வரை இருக்கும்.
மாவட்டத்தில் உள்ள மொத்தம் 78 பீடர்களில், முதற்கட்டமாக 23 பீடர்களை ரூ.50 கோடியில் புனரமைக்கப்பட உள்ளது. டெண்டர் நடவடிக்கைகள் இறுதி ஆகியுள்ளது. மின்வழிப்பாதையில் வேளாண் மற்றும் குடியிருப்பு விநியோகம் தனித்தனியாக பிரிக்கப்படும். இதன் மூலம் குடியிருப்புகளுக்கு தடங்களின்றி சப்ளை கிடைக்கும். விரைவில் பணிகள் துவங்கும் என்கின்றனர்.

