/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெண்ணுடன் தங்கியவர் துாக்கிட்டு தற்கொலை
/
பெண்ணுடன் தங்கியவர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : ஜன 02, 2024 06:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு; கேரளா, வைக்கம் அருகே குலசேகரமங்கலத்தைச் சேர்ந்தவர் சனீஷ் 37. திருமணம் ஆகாத இவர் கொச்சியைச் சேர்ந்த திருமணம் ஆன பெண்ணுடன் பழைய மூணாறு பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் நேற்று முன்தினம் தங்கினார். அவர் நேற்று அதிகாலை தங்கும் விடுதியில் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொச்சியைச் சேர்ந்த திருமணம் ஆன பெண்ணுடன் சனீஷ்க்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்தனர். நேற்று முன்தினம் இரவு தங்கும் விடுதியில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதனால் சனீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.
மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.

