/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி பஸ் ஸ்டாண்ட்டில் கண்காணிப்புகேமரா கட்டுப்பாட்டு மையம் துவக்கம்

ADDED : அக் 23, 2024 05:11 AM
தேனி,: தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்ட் புறக்காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு மையத்தை எஸ்.பி., சிவபிரசாத் திறந்து வைத்தார்.
தேனியில் குற்றங்களை தடுக்கும் நோக்கில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தர போலீசார், வணிகர்களிடம் கோரிக்கை வைத்தனர். இதனால் ரூ.1.6 லட்சம் மதிப்பில் 46 கேமராக்கள் அமைக்க தங்க நகைகடை சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
அதன்படி புது பஸ் ஸ்டாண்டின் உட்புறம் வெளிப்புறங்கள் என 24 இடங்கள், சிவராம் நகர், விஸ்வநாததாஸ் காலனி, கே.ஆர்.ஆர்., நகர், சிட்கோ தொழில்பேட்டை வெளிப்பகுதி, சிவாஜிநகர் உட்பட 22 இடங்கள் என மொத்தம் 46 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கேமராக்களின் கட்டுப்பாட்டு அறை, தேனி புது பஸ் ஸடாண்டில் உள்ள புறக்காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டது.
புதிய கட்டுப்பாட்டு அறையை நேற்று காலை எஸ்.பி., சிவபிரசாத் திறந்து வைத்தார். தேனி டி.எஸ்.பி., சுரேஷ், இன்ஸ்பெக்டர்கள் இளவரசு, ராமலட்சுமி, எஸ்.ஐ.,க்கள் சரவணன், இளங்குமரன் முன்னிலை வகித்தனர். கட்டுப்பாட்டு அறையில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீசார் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.