/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் பாதிப்பை தடுக்க மானியத்தில் தடுப்பூசி
/
செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் பாதிப்பை தடுக்க மானியத்தில் தடுப்பூசி
செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் பாதிப்பை தடுக்க மானியத்தில் தடுப்பூசி
செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் பாதிப்பை தடுக்க மானியத்தில் தடுப்பூசி
ADDED : ஜூலை 25, 2025 03:01 AM
போடி: வீடுகளில் வளர்க்கும் செல்லப் பிராணிகளான நாய், பூனைகளுக்கு ஒருங்கிணைந்த சுகாதார திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் வெறிநோய் தடுப்பூசி போடி அரசு கால்நடை மருத்துவமனையில் செலுத்தப்படுகிறது.
தெரு நாய்கள், வெறிநோய் பாதித்த நாய்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலர் நாய் கடியால் பாதிக்கின்றனர். இதனை தவிர்க்க ஒருங்கிணைந்த சுகாதாரத் திட்டத்தின் கீழ் செல்லப் பிராணிகளான நாய், பூனைகளுக்கு 50 சதவீத மானியத்தில் போடி அரசு கால்நடை மருத்துவமனையில் தடுப்பூசி போடப்படுகிறது.
போடி அரசு கால்நடை டாக்டர் சிவசுப்பிர மணியன் கூறுகையில் : வீடுகளில் வளர்க்கும் செல்லப் பிராணிகளான நாய், பூனைகளுக்கு பிறந்த மூன்று மாதத்தில் வெறிநோய் தடுப்பூசியும், நான்கு வாரம் கழித்து பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்த வேண்டும். அதன் பின் ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி போட வேண்டும். இதற்காக போடி அரசு மருத்துவமனையில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த சுகாதார திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் தடுப்பூசி போடப்படுகிறது.
பிராணிகளின் உரிமையாளர்கள் தங்களது மானிய பங்களிப்பாக ரூ.17 செலுத்தி செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி போட்டு பயன் பெறலாம். இதுபோல தேனி, பெரியகுளம் அரசு கால்நடை மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்படுகிறது என்றார்.

