/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தெரு நாய்களுக்கு இன்று முதல் கருத்தடை ஆப்பரேஷன் கலெக்டர் நடவடிக்கைக்கு வரவேற்பு

ADDED : மார் 12, 2024 11:44 PM
கம்பம் : நகராட்சி பகுதிகளில் திரியும் தெரு நாய்களுக்கு இன்று முதல் கருத்தடை ஆப்பரேஷன் செய்ய கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார்.
நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தெருநாய்களை பிடித்து நகராட்சிகள் கருத்தடை ஆப்பரேஷன் செய்தது. பின் அந்த நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டது.
இதனால் மாவட்டம் முழுவதும் தெருநாய்களின் எண்ணிக்கையும், அதன் தொல்லையும் அதிகரித்தது. எங்கு பார்த்தாலும் கூட்டம் கூட்டமாக திரிந்தது. நாய் கடியால் பலரும் பாதித்தனர்.
இதில் வெறிநோய் பாதித்த நாய்களும் உலா வந்தன.
இந்நிலையில் கலெக்டர் நகராட்சிகளில் தெருநாய்களை பிடித்து கருத்தடை ஆப்பரேஷன் செய்ய சிறப்பு முகாம்கள் நடத்த உத்தரவிட்டார். அதன்படி இன்று கம்பம், கூடலூர், சின்ன மனுார் ஆகிய நகராட்சிகளில் தெரு நாய்களை பிடித்து கருத்தடை ஆப்பரேஷன் செய்யும் பணி நடைபெறுகிறது.
கம்பத்தில் உரக்கிடங்கில் கால்நடை டாக்டர்கள் இந்த ஆப்பரேஷனை மேற்கொள்கின்றனர். மார்ச் 14 ல் போடி, தேனி, பெரியகுளம் நகராட்சிகளில் இம் முகாம் நடைபெறுகிறது.
கலெக்டரின் நடவடிக்கைக்கு மக்கள் வரவேற்றுள்ளனர்.