/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அனைத்து வாய்க்காலிலும் தண்ணீர் திறப்பால் நெல் நடவிற்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை திருமங்கலம், உசிலம்பட்டியிலிருந்து வரவழைப்பு

ADDED : ஜூலை 12, 2025 03:59 AM
கம்பம் : ஒரே நேரத்தில் அனைத்து வாய்க்காலிலும்நீர் திறப்பால் கம்பம் பள்ளத்தாக்கில் நெல் சாகுபடி நடவு பணிக்கு தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் திருமங்கலம், உசிலம்பட்டியில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
முல்லைப் பெரியாறு பாசனத்தில் 14,707 ஏக்கர் பரப்பில் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. தற்போது முதல் போக நடவு பணிகள் துவங்கி உள்ளது. நடவு பணிகளுக்கு இப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள்.
இந்தாண்டு நடவு பணிகளுக்கு உள்ளூரில் தொழிலாளர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
வேறு வழியின்றி உசிலம்பட்டி, எழுமலை, திருமங்கலம் பகுதிகளிலிருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர் கூலி ரூ.ஆயிரம் வரை அதிகரித்துள்ளது.
விவசாயிகள் கூறுகையில், இந்தாண்டு ஒரே சமயத்தில் அனைத்து வாய்க்கால்களிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
எனவே கம்பம் முதல் வீரபாண்டி வரை ஒரே சமயத்தில் விவசாயிகள் நடவு பணியை மேற்கொண்டுள்ளனர்.
எனவே தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது. கடந்த ஆண்டுகளில் முதலில் கம்பம், பின் சின்னமனூர், உத்தம பாளையம் என நடவு பணிகள் விட்டு விட்டு மேற்கொள்வார்கள், எனவே தொழிலாளர்கள் பற்றாக்குறை இல்லாமல் இருந்தது.
இந்தாண்டு ஒரே சமயத்தில் நடவு என்பதால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது என்கின்றனர். இயந்திர நடவு மற்றும் நேரடி விதைப்பும் கணிசமான பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.