/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பத்தில் ஆர்.ஜே.எம்.எஸ். பெட்ரோல் பங்க் திறப்பு விழா
/
கம்பத்தில் ஆர்.ஜே.எம்.எஸ். பெட்ரோல் பங்க் திறப்பு விழா
கம்பத்தில் ஆர்.ஜே.எம்.எஸ். பெட்ரோல் பங்க் திறப்பு விழா
கம்பத்தில் ஆர்.ஜே.எம்.எஸ். பெட்ரோல் பங்க் திறப்பு விழா
ADDED : டிச 24, 2025 06:03 AM

கம்பம்: கம்பத்தில் ஆர்.ஜே.எம்.எஸ். பெட்ரோல் பங்க் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஆர்.ஜே.எம்.எஸ். குழும தலைவர் கே.ஆர். சௌந்தரராசன் தலைமை வகித்தார். ராம் ஜெயம் பள்ளி தாளாளர் கவிதா முன்னிலை வகித்தார். கடலோர காவல் படை தென் பிராந்திய உதவி இயக்குநர் (தணிக்கை) ராம் ஜெயந்த் வரவேற்றார்.
தேனி, திண்டுக்கல் ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன சேல்ஸ் மேனேஜர் அரவிந்த் பாஸ்கர் ரிப்பன் வெட்டி பங்க்கை திறந்து வைத்தார். முதல் விற்பனையை கம்பம் விவசாயிகள் சங்க தலைவர் ஒ.ஆர். நாராயணன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னோடி விவசாயிகள் தேவராஜ், தர்மர், தொழிலதிபர் முத்தையா, கே. எம்.பி. எல். எலக்ட்ரிக்கல் உரிமையாளர் எல். ராஜேந்திரன், ஜே.ஆர். எலக்ட்ரிக்கல் உரிமையாளர் எல்.ரவி,புதுப்பட்டி கண்ணன், விவசாய சங்க செயலாளர் சுகுமாறன் கலந்து கொண்டனர். மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கே.ஆர் ஜெயபாண்டியன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

