/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தொட்டமாந்துரை கால்வாய் திட்டத்திற்கு விரைவில் நிதி பெற்றுத் தருவேன் பிறந்தநாள் விழாவில் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேச்சு
/
தொட்டமாந்துரை கால்வாய் திட்டத்திற்கு விரைவில் நிதி பெற்றுத் தருவேன் பிறந்தநாள் விழாவில் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேச்சு
தொட்டமாந்துரை கால்வாய் திட்டத்திற்கு விரைவில் நிதி பெற்றுத் தருவேன் பிறந்தநாள் விழாவில் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேச்சு
தொட்டமாந்துரை கால்வாய் திட்டத்திற்கு விரைவில் நிதி பெற்றுத் தருவேன் பிறந்தநாள் விழாவில் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேச்சு
ADDED : ஜூலை 31, 2025 03:33 AM

கம்பம் : தொட்ட மாந்துரை கால்வாய் வெட்டும் திட்டத்திற்கு விரைவில் நிதி ஒதுக்கீடு பெற்றுத் தருவேன் என்று கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் பிறந்த நாள் விழாவில் பேசினார்.
தேனி தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ராமகிருஷ்ணன் பிறந்தநாள் நேற்று அவரது இல்லத்தில் கொண்டாடப்பட்டது.
முன்னதாக தாய் தந்தை படங்களுக்கு அஞ்சலி செலுத்தி பின், நந்தகோபாலன் கோயில் வளாகத்தில் உள்ள குலதெய்வம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
நகரில் பல இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். வீட்டில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் நீண்ட வரிசையில் நின்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தொண்டர்கள் மத்தியில் எம்.எல்.ஏ. பேசியதாவது :
கடந்த 4 ஆண்டுகளில் கம்பராயப்பெருமாள் கோயிலில் ரூ.3.75 கோடி,சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் கோயில் ரூ.5 கோடி, ரூ.4 கோடியில் உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபங்கள் கட்ட அனுமதி பெற்று தந்துள்ளேன்.
கம்பம் பிரசவ வார்டு விரிவாக்கத்திற்கு ரூ.10 கோடியில் கட்டடம், உத்தமபாளையம், சின்னமனூரில் அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவு கட்டடம், ரூ.2 கோடியில் சின்னமனூரில் அறிவுசார் நூலகம் கட்டப்பட்டுள்ளது.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 18 ம் கால்வாய் பராமரிப்பிற்கு ரூ.10 கோடி பெற்று பணிகள் துவங்க உள்ளது.
க . புதுப் பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 1.75 கோடியில் வெளிநோயாளிகள் பிரிவு, பிரசவ வார்டு கட்டப்பட்டுள்ளது.
அம்ரூத் திட்டத்தின் கீழ் காமயகவுண்டன்பட்டி, புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், சின்னமனூர் ஆகிய ஊர்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்க ரூ.110 கோடி வரை பெற்றுத் தந்துள்ளேன். கோயில் தேர்களுக்கு கண்ணாடி கொட்டகை அமைக்க பணி நிறைவடைந்துள்ளது.
எனது கனவு திட்டமான தொட்டமாந்துறை கால்வாய் வெட்டும் திட்டத்திற்கு விரைவில் நிதி ஒதுக்கீடுகள் பெற்றுத்தருவேன் என பேசினார்.
விழாவில் ஆண்டிபட்டி மகாராசன் எம்.எல்.ஏ., சின்னமனூர் முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பஞ்சாப் குமரன், மாவட்ட பிரதிநிதி பஞ்சாப் செந்தில்குமார், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் பாண்டியன், சின்னமனூர் நகர் செயலாளர் முத்துக் குமார், மாவட்ட அவைத் தலைவர் மனோகரன், கம்பம் நகர் செயலாளர்கள் பால்பாண்டியன், வீரபாண்டி, தலைமை செயற்குழு உறுப்பினர் குருகுமரன், அயலக அணி புதுப்பட்டி எல்.ரவி, ராசா, நகராட்சி கவுன்சிலர்கள், நகர், ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

