/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறப்பு நிலை பேரூராட்சி இல்லாததால் செயல் அலுவலர்கள் பதவி உயர்வில் சிக்கல் செயல் அலுவலர்கள் பதவி உயர்வில் சிக்கல்

ADDED : பிப் 15, 2024 06:18 AM
கம்பம்: மாவட்டத்தில் சிறப்பு நிலை பேரூராட்சிகள் இல்லாததால் இங்கு பணியாற்றும் செயல் அலுவலர்கள் பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்பில் ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொன்றிலும் மக்கள் தொகை, வருவாய் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் கிரேடு வாரியாக பிரித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் ஆறு நகராட்சிகள், 22 பேரூராட்சிகள், 130 ஊராட்சிகள் உள்ளன. பேரூராட்சிகளில் இரண்டாம் நிலை, முதல் நிலை, தேர்வு நிலை, சிறப்பு நிலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் நிலையில் இருந்து பணியாற்றி பின் படிப்படியாக அனைத்து நிலைகளிலும் பணியாற்றும் செயல் அலுவலர்களுக்கு மட்டுமே உதவி இயக்குனர் பதவி உயர்வு கிடைக்கும்.
தேனி மாவட்டத்தில் சிறப்பு நிலை பேரூராட்சி இல்லாததால், இங்கு பேரூராட்சிகளில் செயல் அலுவலர்களாக பணியாற்றுபவர்கள் பெரும்பாலோர் சிறப்பு நிலைக்கு வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் என்பதால், பதவி உயர்வே வேண்டாம் என்று எழுதி கொடுத்து விடுகின்றனர். இது குறித்து செயல் அலுவலர்கள் கூறுகையில், தமிழகத்தில் 490 பேரூராட்சிகள் உள்ளன. இரண்டாம் நிலை 59, முதல் நிலை 190, தேர்வு நிலை 179, சிறப்பு நிலை 62 என உள்ளது.
தமிழகம் முழுவதுமே சிறப்பு நிலை குறைவாக இருப்பதால் பெரும்பாலான செயல் அலுவலர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு முன்னரே ஓய்வு பெறும் நிலை உள்ளது . எனவே அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு நிலை பேரூராட்சிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.