/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மார்ச் 23,24ல் மனு தாக்கலுக்கு அனுமதி இல்லை
/
மார்ச் 23,24ல் மனு தாக்கலுக்கு அனுமதி இல்லை
ADDED : மார் 21, 2024 02:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தமிழகத்தில் ஏப்.,19ல் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக வேட்பு மனுத்தாக்கல் நேற்று துவங்கியது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய இறுதி நாள் மார்ச் 27 ஆகும்.
தேனி தேர்தல் பிரிவு அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான படிவங்களை 20 பேர் வாங்கி சென்றனர். நேற்று யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வில்லை. அதிகாரிகள் கூறுகையில், 'மார்ச் 23 நான்காவது சனிக்கிழமையும் மார்ச் 24ல் ஞாயிறு அரசு விடுமுறை நாட்கள் என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்ய இயலாது', என்றனர்.

