/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
திட்டங்களால் வளமாகும் போடி நகராட்சி
/
திட்டங்களால் வளமாகும் போடி நகராட்சி
ADDED : அக் 11, 2024 05:40 AM
போடி நகராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து நகராட்சி தலைவர் ச.ராஜ ராஜேஸ்வரி, கமிஷனர் எஸ்.பார்கவி கூறுகையில் : போடி நகராட்சி பகுதியில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூபாய் 76.15 கோடி செலவில் குரங்கணியில் இருந்து கூடுதலாக பைப் லைன் அமைக்கப்பட்டு போடி பரமசிவன் கோயில் அருகே உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
அங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான பணிகள் நடந்துள்ளது. போடி நகராட்சியில் 4 இடங்களில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் குடிநீர் தட்டுப்பாடு இன்றி சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
கோடையை சமாளிக்க ரூ.30 கோடி செலவில் எல்லப்பட்டியலில் இருந்து போடி வரை குடிநீர் கொண்டு வர நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் நடந்துள்ளது. நுாற்றாண்டு நிறைவு திட்டத்தின் கீழ் ரூ.50 கோடி செலவில் பூங்கா மேம்படுத்துதல், குப்பைகளை உரமாக்குதல், தார் ரோடு, பேவர் பிளாக் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் ஏற்கனவே நடந்து உள்ளது.
இந்த ஆண்டு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 22.32 லட்சம் செலவில் மழைநீர் வடிகால், சி.சி.டி.வி., கேமரா, ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு உள்ளது.
சுப்புராஜ்நகர் இறகு பந்தாட்ட மைதானத்தில் தரை தளம் அமைக்கப்பட்டு உள்ளன. 15 வது நிதி குழு மானியத்தில் ரூ.448 லட்சம் செலவில் திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் அபிவிருத்தி, மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.104 லட்சம் செலவில் தார் ரோடு புதுப்பிக்கப்பட்டு உள்ளது. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.109 லட்சம் செலவில் தார் ரோடு புதுப்பிக்கும் பணி, பூங்கா அமைக்கப்பட்டு உள்ளன.
மாநில நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ.96 லட்சம் செலவில் நகராட்சி பள்ளிகள் பராமரிப்பு, கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி நடந்துள்ளது.
மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் செலவில் ஆடுவதை கூடம் பராமரிப்பு பணிகள் நடந்துள்ளன. தொற்று பரவாமல் இருக்கும் வகையில் கிருமி நாசினி, பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு குப்பையில்லா நகராட்சியாக மாற்றும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம் என்றனர்.

