/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அமைச்சரவை மாற்றத்தில் யாருக்கு ஏமாற்றம் என்பதை முதல்வர் முடிவு செய்வார் போடியில் அமைச்சர் பொன்முடி பேச்சு

ADDED : செப் 26, 2024 03:08 AM
போடி:''அமைச்சரவை மாற்றத்தில் மாற்றம் யாருக்கு ஏமாற்றம் யாருக்கு என்பதை முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்வார்,'' என, தேனி மாவட்டம் போடியில் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
போடி ஏல விவசாயிகள் சங்க கல்லூரி பொன் விழாவில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி கல்லூரி அஞ்சல் தலையை வெளியிட்டார்.
பின் அவர் கூறியதாவது: அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் ஆவதற்கான எல்லா தகுதிகளும் உள்ளது. காங்., முன்னாள் தலைவர் குமரி ஆனந்தன் இல்லை என்றால் முன்னாள் கவர்னர் தமிழிசை யார் என்று கூட தெரிய வாய்ப்பு இல்லை. ஆனால் அவர் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்.
அமைச்சர் உதய நிதி இளமை பருவத்தில் இருந்தே தி.மு.க., இயக்கத்திற்காக உழைத்தவர். இளைஞர் வழிகாட்டியாக உள்ளார். படிக்கும் மாணவ, மாணவியர்கள் எண்ணிக்கை அதிகரிக்க நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். படிக்கும் போதே தொழில் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதற்காக மாணவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்படுகிறது. பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு தொழிற்சாலைகள் மூலம் பாடம் நடத்தும் முறையை உருவாக்கியுள்ளார். உயர் கல்வி பெற வேண்டும் என்பதற்காக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் ஐ.டி.ஐ.,யிலும், பிளஸ் 2 தேர்ச்சி பெறாதவர்கள் பாலிடெக்னிக் சேர்ந்து உயர்கல்வி பெறலாம். உயர் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை இரண்டு கண்களாக கருதி முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார் என்றார்.