/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள் புக்கிங் செய்தால் தகவல் அளிக்க உத்தரவு
/
திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள் புக்கிங் செய்தால் தகவல் அளிக்க உத்தரவு
திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள் புக்கிங் செய்தால் தகவல் அளிக்க உத்தரவு
திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள் புக்கிங் செய்தால் தகவல் அளிக்க உத்தரவு
ADDED : மார் 19, 2024 05:44 AM
கம்பம்: திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள் நிகழ்ச்சிகளுக்கென யார் புக்கிங் செய்தாலும், உடனடியாக சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் அலுவலர், போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தகவல் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவித்தவுடன் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. புதிய அறிவிப்புகள் வெளியிட கூடாது என அரசிற்கும், திட்டங்கள் அடிக்கல் நாட்டுதல், பணிகள் துவக்கி வைத்தல் போன்றவை மேற்கொள்ள கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் இருந்த தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஊரிலும் உள்ள திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்களில் நிகழ்ச்சிகளுக்கென அரசியல் கட்சிகள், கட்சி நிர்வாகிகள் புக்கிங் செய்தாலும், புக்கிங் செய்தவுடன் சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் அலுவலர் அல்லது போலீஸ் ஸ்டேஷனுக்கு த கவல் அளிக்க வேண்டும்.
அதில் புக்கிங் செய்தவர் யார், என்ன நிகழ்ச்சி, நடைபெறும் தேதி, பங்கேற்கும் முக்கிய பிரமுகர் பற்றிய தகவல்களை தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழு உள்ளிட்ட தேர்தல் கண்காணிப்பு அலுவலர்களும் ரோந்து சுற்றி கண்காணித்து வருகின்றனர்.
இது தவிர நகரங்களில் உள்ள லாட்ஜ்கள், தங்கும் விடுதிகளிலும் தினசரி அறை எடுத்து தங்குபவர்களின் விபரங்களை போலீசாருக்கு தெரிவிக்கவும், சந்தேகப்படும்படி யாராவது அறை கேட்டால் உடனே தகவல் தருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

