/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
108 ஆம்புலன்ஸில் பணிபுரிய மார்ச் 16ல் நேர்முக தேர்வு
/
108 ஆம்புலன்ஸில் பணிபுரிய மார்ச் 16ல் நேர்முக தேர்வு
108 ஆம்புலன்ஸில் பணிபுரிய மார்ச் 16ல் நேர்முக தேர்வு
108 ஆம்புலன்ஸில் பணிபுரிய மார்ச் 16ல் நேர்முக தேர்வு
ADDED : மார் 14, 2024 04:55 AM
தேனி: மாவட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை பணிக்கு ஆட்கள் தேர்வு முகாம் மார்ச் 16ல் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நடக்க உள்ளது.' என மேலாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் பணிபுரிய மருத்துவ உதவியாளர்கள் பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் மார்ச் 16 ல் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நடக்க உள்ளது.
மருத்துவ உதவியாளருக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பி.எஸ்சி., நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி., ஆகிய மருத்துவ தொழில்நுட்பட படிப்புகளை பிளஸ் 2 விற்கு பின்படித்திருக்க வேண்டும் அல்லது லைப் சயின்ஸ் பி.எஸ்சி., விலங்கியல், தாவரவியல், உயிர்வேதியியல், நுண்ணுயிர்வியல், நுண்ணுயிர் தொழில்நுட்பவியல் இத்துறைகளின் ஏதாவது ஒன்றில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.16,020 வழங்கப்படும். நேர்முக தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருப்பது அவசியம். எழுத்துத்தேர்வு, மருத்துவ நேர்முக தேர்வில் உடற்கூறியல், முதலுதவி அடிப்டை நர்சிங் பணி தொடர்பாக இருக்கும். பின் மனிதவளத்துறையின் நேர்முகத் தேர்வு நடக்கும்.
இதில் தேர்வானவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை, ஆம்புலன்ஸ் வாகன சேவை குறித்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி ஏற்பாடு செய்து தரப்படும். கூடுதல் விபரங்களுக்கு 044 2888 8060 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

