/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீட்டில் மூலிகை செடிகள்; காலி இடத்தில் பூச்செடிகள் அசத்தும் விவசாய தம்பதி
/
வீட்டில் மூலிகை செடிகள்; காலி இடத்தில் பூச்செடிகள் அசத்தும் விவசாய தம்பதி
வீட்டில் மூலிகை செடிகள்; காலி இடத்தில் பூச்செடிகள் அசத்தும் விவசாய தம்பதி
வீட்டில் மூலிகை செடிகள்; காலி இடத்தில் பூச்செடிகள் அசத்தும் விவசாய தம்பதி
ADDED : பிப் 19, 2024 05:24 AM

தேனி குன்னுாரில் வசிக்கும் விவசாய தம்பதி தங்கள் வீட்டு முகப்பில் மூலிகை செடிகளும், அருகே உள்ள காலி இடத்தை பூங்காவனமாக மாற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
'வீட்டுத்தோட்டம் அமைத்து வீடுகளுக்கு தேவையான காய்கறிகள், பழங்களை அங்கிருந்து பயன்படுத்துவோம். இயற்கை காய்கறிகளை நாமே விளைவிப்போம்' என, அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதற்காக தோட்டக்கலைத்துறை, வேளாண் துறை மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. தோட்டக்கலைத்துறை சார்பில் பொது மக்களுக்கு வீட்டில் மாடித்தோட்டம், மூலிகை தோட்டம் அமைக்க உபகரணங்கள், விதைகள், மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. மேலும் பள்ளிகளிலும் மாணவர்கள் மத்தியில் மரங்கன்றுகள் வளர்ப்பின் முக்கியத்துவம், சுற்றுசூழல் மாற்றத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
தங்கள் வீடுகளில் மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் அமைத்து அதனை தொடர்ந்து பராமரித்தும் வருகின்றனர். இதில் ஆண்டிப்பட்டி அருகே உள்ள குன்னுாரை சேர்ந்த விவசாய தம்பதியினர் அசோக்குமார் - லட்சுமி பிரபா. இவர்கள் இருவரும் தமது வீட்டின் முகப்பு, வீட்டிற்கு அருகே உள்ள காலி இடத்தில் ஓமவல்லி, துளசி, கற்றாழை, மருதாணி, வெற்றிலை ஆகிய மூலிகை செடிகள், சீத்தா, மாதுழை, மா உள்ளிட்ட பழகன்றுகள், நந்தியாவட்டை,ரோஜா, முல்லை, மல்லி, பிச்சி, செம்பருத்தி, டேபிள் ரோஸ் உள்ளிட்ட பூச்செடிகளை நட்டு செழுமையாக வளர்த்துள்ளனர். இதுதவிர வீட்டின் சமையல் தேவைக்கு முருங்கை, புதினா, கூடைகளில் பல்வேறு வகையான அலங்கார செடிகளை பூத்தொட்டிகள், காலி இடத்தில் வளர்த்து தினமும் பராமரித்து வருகின்றனர்.
குணமாகும் சர்க்கரை நோய்
லட்சுமிபிரபா, இல்லத் தரசி, குன்னுார்: சிறுவயதில் இருந்தே வீட்டில் செடிகள் வளர்க்க வேண்டும் என ஆசை இருந்தது. கணவர் உதவியுடன் காலியாக இருந்த இடத்தில் பழக்கன்றுகள், பூச்செடிகள் நடவு செய்து பராமரிக்க துவங்கினேன். கடந்த 3 ஆண்டுகளாக வீட்டு முகப்பில் தொட்டியிலும் செடிகள் வைத்து பராமரித்து வருகிறேன். காய்கறி கழிவுகள், முட்டை ஓடுகள் போன்றவற்றை தொட்டிகளில் வளர்க்கும் செடிகளுக்கு உரமாக பயன்படுத்துகிறேன். விவசாயத்திற்கு பயன்படுத்தும் உரங்களை வீட்டிற்கு அருகே வளர்க்கும் கன்றுகள், செடிகளுக்கு பயன்படுத்துகிறேன். இன்சுலின் செடி வீட்டில் வளர்த்து வருகிறேன். இச்செடியின் இலைகளை உண்பதால் உடலில் சர்க்கரையை சீராக இருக்கும் என கூறினர். தோட்டக்கலைத்துறை வழங்கிய பொருட்கள் மட்டும் இன்றி தொட்டிகள், வீட்டுத்தோட்ட பராமரிப்பு கருவிகள் தனியாக வாங்கி பயன்படுத்துகின்றோம். செடி வைத்து பராமரிக்கும் தொட்டியை நேரடியாக தரையில் வைக்காமல் ஸ்டாண்ட் வைத்து அதன்மேல் தொட்டி வைத்துள்ளோம். இதனால் தரையில் நீர் தேங்கி நிற்காது, என்றார்.
வீணாக்குவதில்லை
அசோக்குமார், விவசாயி, குன்னுார்: வீட்டுத்தோட்டம் பராமரிப்பதால் டி.வி., பார்ப்பது, வீணாக பொழுதை கழிப்பது தவிர்க்கப்படுகிறது. விஷேசங்களுக்கு செல்லும் போது அங்கு வழங்கும் மரக்கன்றுகளை விணடிப்பது கிடையாது.
அதனை வீட்டருகில் உள்ள இடத்தில் நடவு செய்து பராமரிக்கின்றோம். முழு நேரமாக விவசாயத்தில் ஈடுபட்டாலும், வீட்டு தோட்டம், மூலிகை செடிகளை பராமரிக்கும் போது குடும்பத்தினருடன் செலவழிக்க நேரம் கிடைக்கிறது.
வீட்டுத்தோட்டத்தை பராமரிப்பது மகிழ்ச்சி தருகிறது. பெரும்பாலும் தோட்டத்தை பராமரிக்க உதவி செய்கிறேன். இத்தோட்டத்தை பராமரித்து அதில் இருந்து பழங்கள், காய்கள் அறுவடை செய்து சமையலுக்கு பயன்படுத்துகிறோம்.', என்றார்.

