ADDED : டிச 22, 2025 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி அருகே நாகலாபுரத்தில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ஐயப்ப பக்தர்கள், முருக பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா நடந்தது. சிறுவர்கள் முதல் பெரியோர் வரை ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினர்.
விழாவினை ஒட்டி குத்து விளக்கு பூஜை, யாக பூஜை, சுவாமி நகர்வலம் நடந்தது. சுற்று கிராம பகுதியில் இருந்து ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர்.

