/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்த எலுமிச்சை பழம்
/
தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்த எலுமிச்சை பழம்
ADDED : மார் 12, 2024 06:15 AM
ஆண்டிபட்டி : தேவை அதிகரிப்பால் எலுமிச்சை பழங்கள் விலை உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி பகுதியில் எலுமிச்சை விளைச்சல் அதிகம் உள்ளது.
இப்பகுதியில் விளையும் எலுமிச்சை பெரியகுளம் மொத்த மார்க்கெட்டில் இருந்து வியாபாரிகள் மூலம் வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறது.
கோடை துவங்கியதால் எலுமிச்சை பழங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் சில்லறை விலையில் தரமான ஒரு எலுமிச்சை பழம் ரூ.10 முதல் 15 வரை விலை உள்ளது. திடீர் விலை உயர்வு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.
எலுமிச்சை வியாபாரிகள் கூறியதாவது: மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த 4 நாட்களில் தேவை பல மடங்கு உயர்ந்தது. கிலோ ரூ.70 முதல் 80 வரை இருந்த எலுமிச்சை பழங்கள் விலை கடந்த சில நாட்களில் கிலோ ரூ.160 முதல் 200 வரை உயர்ந்துள்ளது.
கோடையில் நாட்டு ரக எலுமிச்சை காய்ப்பு அதிகமாகும். ஒட்டு ரகம் விளைச்சல் குறையும். கோடை துவங்கியதால் நகர் பகுதிகளில் குளிர் பானங்களில் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
தேனி மாவட்டத்தில் தினமும் 5 டன் அளவில் எலுமிச்சை வரத்து இருந்தும் தேவை அதிகரிப்பால் விலை உயர்கிறது.
பங்குனி, சித்திரை மாதங்களில் உள்ளூர் பொங்கல் விழாக்களால் தேவை இன்னும் அதிகமாகும்.
இவ்வாறு கூறினர்.

