/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தி.மு.க., ஒன்றிய செயலாளர் இடையூறால் வளர்ச்சி பணிகள் முடங்குவதாக புகார் பெண் ஒன்றிய தலைவர் கலெக்டரிடம் மனு

ADDED : மார் 16, 2024 06:26 AM

தேனி : தேனி மாவட்டம், க.மயிலாடும்பாறை தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சுப்பிரமணி என்பவர் ஒன்றிய நிர்வாகத்தில் இடையூறு செய்வதால் வளர்ச்சிப்பணிகள் முடங்கியுள்ளது என ஒன்றிய தலைவர் சித்ரா,துணைத் தலைவர் சேகரன், கவுன்சிலர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளதாக கலெக்டர் ஷஜீவனாவிடம் புகார் மனு அளித்தனர்.
தேனி மாவட்ட கடமலைககுண்டு - மயிலாடும்பாறை ஒன்றியக்குழுத் தலைவராக தி.மு.க., வை சேர்ந்த சித்ரா, துணைத்தலைவராக சேகரன் உள்ளனர். இங்குள்ள 14 கவுன்சிலர்களில் 10 தி.மு.க., 4 அ.தி.மு.க.,கவுன்சிலர்களாக உள்ளனர். இப் பகுதி தி.மு.க., ஒன்றியச் செயலாளராக வழக்கறிஞர் சுப்பிரமணி ஒன்றிய நிர்வாக பணிகளில் இடையூறு செய்வதால், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யப்போவதாக நேற்று தலைவர் சித்ரா தலைமையிலான ஒன்றிய கவுன்சிலர்கள் கலெக்டர் ஷஜீவனாவிடம் மனு அளித்தனர்.
தலைவர் சித்ரா கூறியதாவது: அரசுக்கு களங்கம் ஏற்படும் வகையில் தி.மு.க., தெற்கு ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணி, எங்களை செயல்பட விடாமல் தடுக்கிறார். அலுவலர்களை பணி செய்ய விடாமல் இடையூறு செயகிறார். ஒப்பந்த பணிகளை ஒன்றிய செயலாளர் அனுமதி இன்றி மேற்கொள்ளக்கூடாது என மிரட்டுகிறார். இதனால் ஒன்றியத்தில் வளர்ச்சிபணிகள் முடங்கி உள்ளன. இதுகுறித்து எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், கட்சி தலைமை வரை புகார் அளித்தோம். ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படாமல் இணைந்து செயல்பட அமைச்சர் உதயதிநிதி கூறியும் அதனை ஒன்றிய செயலாளர் ஏற்க மறுத்து இடையூறு செய்கிறார். நான் தாழ்த்தப்பட்ட சமூக பெண் என்பதால் என்னை தலைவர் பணி செய்ய விடாமல் தடுக்கின்றனர்.கட்சி நிகழ்ச்சி பேனர்களில் எனது போட்டோவை அகற்ற கூறுகிறார் என கூறி கண் கலங்கினார். கலெக்டர், ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க தவறினால் அனைவரும் ராஜினாமா செய்வோம்.' என்றார்.