/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தி.மு.க., திருந்தவே இல்லை; ஓட்டளித்த மக்கள் ஏமாற்றம்; அ.ம.மு.க., பொது செயலாளர் தினகரன் பேட்டி

ADDED : பிப் 21, 2024 05:47 AM
ஆண்டிபட்டி :
தி.மு.க., திருந்தியதாக நம்பி 2021 சட்டசபை தேர்தலில் பொதுமக்கள் ஓட்டளித்தனர். ஆனால் தி.மு.க. இன்னும் திருந்தவே இல்லை என அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் ஆண்டிபட்டியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
ஆண்டிபட்டியில் கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:
ஓ. பன்னீர்செல்வம் எனது பழைய நண்பர். நாங்கள் இருவரும் மீண்டும் ஒன்றாக இணைந்து செயல்படுகிறோம். பிப்., 24ல் தேனி கூட்டத்தில் அவருடன் பங்கேற்பேன். லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி இன்னும் முடிவாகவில்லை.
பழனிச்சாமியின் 4 ஆண்டு கால ஆட்சி ஊழல், முறைகேடுகள் நிறைந்ததாக இருந்தது. பழனிச்சாமி ஆட்சி கமிஷன் மண்டி போல் இருந்தது.
தி.மு.க., திருந்தியது என நம்பி 2021 தேர்தலில் பொதுமக்கள் ஓட்டளித்து ஏமாந்துவிட்டனர். ஆனால் திருந்தவே இல்லை. தமிழக பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தேர்தல் வாக்குறுதி போல் மக்களை ஏமாற்றுவதாக உள்ளது. மூன்று ஆண்டில் தி.மு.க.வின் 90 சதம் வாக்குறுதிகள் நிறைவேறவில்லை. வரும் தேர்தலில் அ.ம.மு.க., மாற்று சக்தி என நிரூபணம் ஆகும். வரும் லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடும் முடிவு இல்லை என்றார். தினகரனுடன் பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர் சையதுகான், ஒன்றிய செயலாளர் நாகராஜ், அ.ம.மு.க., அமைப்பு செயலாளர்கள் கதிர்காமு, ரபீக், மாவட்டச் செயலாளர்கள் முத்துச்சாமி காசிமாயன் உட்பட பலர் இருந்தனர்.