/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காலை உணவு திட்டத்திற்கு பேனர் வைக்க ரூ.7 லட்சம் செலவிடுவதா ஒன்றிய கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் கேள்வி

ADDED : பிப் 08, 2024 04:50 AM
ஆண்டிபட்டி, : காலை சிற்றுண்டி திட்டத்திற்கு பேனர் வைக்க ரூ.7 லட்சம் செலவு செய்வது சரிதானா என கேட்டு தி.மு.க., கவுன்சிலர் ஆண்டிபட்டி ஒன்றிய கூட்டத்தில் வாக்குவாதம் செய்தார்.
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் லோகிராஜன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் வரதராஜன், பி.டி.ஓ.,க்கள் அய்யப்பன், திருப்பதி வாசகன் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் மற்றும் வரவு செலவு குறித்து விவாதிக்கப்பட்டது.
தி.மு.க., கவுன்சிலர் வைரமுத்து பேசுகையில், ' திருமலாபுரம் ஓடையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான பாலம் கட்ட மனு கொடுத்தேன்.
பி.டி.ஓ..அய்யப்பன் பொது நிதியில் கட்டி தெரிவதாக கூறி ஓராண்டாகியும் இன்னும் கட்டவில்லை. பொது நிதி பற்றாக்குறையால் நபார்டு நிதியில் கட்டித் தருவதாக கூறி அலைக்கழிப்பு செய்து வருகிறார். காலை சிற்றுண்டி திட்டத்தில் பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.7 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. 5 க்கு 3 அடி பிளக்ஸ் அமைக்க ரூ.1500 வரை தான் செலவாகும். ஆனால் ஒரு பிளக்ஸ் அமைக்க ரூ.8350 செலவிடப்பட்டுள்ளது. இது சரியா என கேட்டு வாக்கு வாதம் செய்தார்.
காங்.,கவுன்சிலர் சின்னப்பாண்டி பேசியதாவது:
குன்னூரில் அமைக்கப்பட்ட சிமென்ட் ரோடு, இந்திரா நகரில் ரூ.20 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ரோடு ஆகியவற்றை ஜல் ஜீவன் திட்டத்தில் குழாய் பதிப்புக்காக சேதப்படுத்தி விட்டனர். இது குறித்துநடவடிக்கை இல்லை.
அரசிற்கு அவப்பெயர் ஏற்படும் விதமாக செயல்படும் அதிகாரிகளை மாற்ற வேண்டும்.இவ்வாறு பேசினார். கவுன்சிலர்களின் புகாருக்கு தீர்வு கிடைக்காமலேயே கூட்டம் முடிந்தது.