ADDED : செப் 15, 2025 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி பப்ளிக் பள்ளியில் எம்.எஸ்.எஸ்.சி., ஸ்போர்ட் நிறுவனம் சார்பில் மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி நடந்தது. போட்டிகளை தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறைத்தலைவர் தர்மராஜன், துணைத் தலைவர் ஜீவகன், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளிச் செயலாளர் ராஜமோகன், இணைச் செயலாளர் விவேகானந்தன், அப்சர்வர் கல்வி இன்டர்நேஷனல் பள்ளி நிர்வாகி புவனா பரிசுகள் வழங்கினர்.