/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மீட்டர் தட்டுப்பாட்டால் புதிய மின் இணைப்பு பெற முடியாமல் தவிப்பு
/
மீட்டர் தட்டுப்பாட்டால் புதிய மின் இணைப்பு பெற முடியாமல் தவிப்பு
மீட்டர் தட்டுப்பாட்டால் புதிய மின் இணைப்பு பெற முடியாமல் தவிப்பு
மீட்டர் தட்டுப்பாட்டால் புதிய மின் இணைப்பு பெற முடியாமல் தவிப்பு
ADDED : பிப் 08, 2024 05:04 AM
தேனி : மாவட்டத்தில் புதிய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்தவர்கள் 38 நாட்களாக மீட்டர் இல்லாததால் பொதுமக்கள் புதிய இணைப்பு பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் பழைய மின் மீட்டருக்கு பதிலாக ஸ்மார்ட் மீட்டர் மாற்றி வருகிறது. ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தும் பணி நடக்க இருப்பதால், டிஜிட்டல் மீட்டர் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனால் ஒரு முனை மின் இணைப்பு வழங்க கோரியவர்களும், வீடுகளில் பழுதான மீட்டர்களை மாற்றி புதிய மீட்டர் பொருத்தும் கோரி மனு செய்தவர்களும் பல மாதங்களாக காத்திருக்கின்றனர்.
மாவட்டத்தில் புதிய மின் இணைப்பு கோரியவர்கள் ஸ்மார்ட் மீட்டர் கையிருப்பு இல்லாததால் 2024 ஜனவரி முதல் 38 நாட்களாக 800 பேர் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.
பலர் புதிய வீடு கட்டுமான பணிகளை முடிந்தும் மின் இணைப்பு வழங்காததால் வீடுகளில் குடியேற முடியாமல் தவிக்கின்றனர்.
மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்திற்கு தேவையான ஸ்மார்ட் மீட்டர் கோரி வாரியத்திற்கு அனுப்பி உள்ளோம்.
மீட்டர் வந்தவுடன் மின் இணைப்பு வழங்கப்படும் என்றனர்.