/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூடலுார் தேசிய நெடுஞ்சாலையில் நெரிசல் வாகனங்களை நிறுத்த கட்டுப்பாடு அவசியம் - சபரிமலை சீசனில் கூடுதல் வாகனங்களால் விபத்து அபாயம்

ADDED : டிச 21, 2025 06:17 AM

கூடலுார்: கூடலுார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாடின்றி வானங்கள் நிறுத்தப்படுவதால் சபரிமலை சீசனுக்காக வரும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
சபரிமலையில் மண்டல பூஜை துவங்கி இரண்டு வாரத்திற்கு மேல் ஆகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் தேனி மாவட்டம் வழியாக செல்கின்றன.
கூடலுாரில் இருந்து கம்பம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அப்பாச்சி பண்ணை உள்ளது. அப்பகுதியில் திராட்சைத் தோட்டங்களை பார்வையிடுவதற்காக கேரளாவிலிருந்து தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் வரும் வாகனங்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி ஆங்காங்கே ரோட்டோரங்களில் நிறுத்தப்படுகிறது. மேலும் வாகனத்தில் இருந்து இறங்கி ரோட்டை கடந்து செல்லும் சுற்றுலா பயணிகளும் அதிகம். தற்போது சபரிமலை சீசனுக்காக கூடுதலாக வரும் பக்தர்களின் வாகனங்கள் இப்பகுதியில் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அதனால் போக்குவரத்து போலீசார் வாகனங்களை நிறுத்த கட்டுப்பாடு விதிக்க வேண்டும். மேலும் சீசன் முடியும் வரை தினந்தோறும் ரோந்து செல்ல வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.