ADDED : டிச 22, 2025 06:06 AM
தேனி: தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் கல்லுாரி கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினிப் பயன்பாட்டியல், கணிதத் துறைகள் சார்பில் கணினி தொழில்நுட்பங்கள், புதுமையான, உண்மையான உலகப் பயன்பாடுகள் என்ற தலைப்பில் 2 நாட்கள் கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரிச் செயலாளர் தாமோதரன் தலைமை வகித்தார். சங்கத் தலைவர் நம்பெருமாள்சாமி முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் வெற்றிவேல், தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்ப கழக முன்னாள் உறுப்பினர் ஸ்ரீனிவாசன் பேசினர். கருத்தரங்கின் முதல் நாள் ஓசூர் பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லுாரி இணைப் பேராசிரியர் கார்த்திகேயன், ஓமன் தொழில்நுட்ப, பயன்பாட்டு அறிவியல் பல்கலை பேராசிரியர் சலீம் ராஜா பேசினர். இரண்டாம் நாள் கருத்தரங்கில் கனடா வாணியர் கல்லுாரி கணினி அறிவியல் துறை பேராசிரியர் சக்கரவர்த்தி ராமநாதன், மலேசியா இன்டெல் நிறுவன நிர்வாகி ரமேஷ்பெருமாள் இணைய வழியில் செயற்கை நுண்ணறிவியல் கட்டடக்கலை பற்றி பேசினர். கருத்தரங்கில் பல கல்லுாரி மாணவர்கள் நேரடியாகவும், வெளிநாடுகள், மாநிலங்களில் இருந்து இணைய வழியாக பங்கேற்றனர். மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.

