/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வீடு குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்

ADDED : பிப் 03, 2024 04:38 AM
தேனி : நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு கேட்டு விண்ணப்பித்தவர்களின் தகுதியான மூன்றாம் பாலிதனத்தவர்களுக்கு தகுதி அடிப்படையில் வீடு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.' என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்தார்.
தேனி கலெக்டர் அலுவலகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., ஜெயபாரதி முன்னிலை வகித்தார். சமூகநலத்துறை மாவட்ட அலுவலர் சியாமளாதேவி வரவேற்றார். திருநங்கைகள், சமூகநலத்துறை அலுவலகர்கள் பங்கேற்றனர்.
வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு வழங்க கோரி விண்ணப்பித்த 37 பேரில் 25 பேருக்கு வீடுகள் வழங்க அனுமதி கிடைத்துள்ளது. மற்ற மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.
திருநங்கை அம்மு பி.எல்., படிக்க உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் உதவித்தொகை வழங்கப்படும் என மாவட்ட சமூக நல அலுவலர் தெரிவித்தார்.
கலெக்டர் கூறுகையில், விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் பரிவர்த்தனைக்கு வங்கிக்கணக்கு துவங்க பிப். 6ல் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. அதில் அனைவரின் விபரங்களை அளித்து பயன் பெறலாம் என்றார்.