/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெண்ணை ஏமாற்றிய இருவர் மீது வழக்கு
/
பெண்ணை ஏமாற்றிய இருவர் மீது வழக்கு
ADDED : மே 04, 2025 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி :தேனி கே.ஆர்.ஆர்., நகர் நிஷாபேகம் 24, பூதிப்புரம் கார்த்திக்ராஜா 27, இருவரும் 2016ல் காதலித்தனர்.
நெருங்கி பழகியதால் நிஷாபேகம் கர்ப்பமடைந்தார். தற்போதைக்கு குழந்தை வேண்டாம் என கார்த்திக்ராஜா கூறியதால் கருவை கலைத்தனர். மேலும் தனிக்குடித்தனம் செல்ல வீட்டிற்கு பணம் வழங்க வேண்டும் என ரூ.10ஆயிரத்தை நிஷாபேகத்திடம் பெற்றார். பின் திருமணம் செய்யாமல் கார்த்திக் ராஜா கொலை மிரட்டல் விடுத்தார்.புகாரில் தேனி அனைத்து மகளிர் போலீசார் கார்த்திக்ராஜா, அவரது தாயார் ராஜேஸ்வரி மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

