sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக கூறி நிலத்தை கிரையம் செய்து மோசடி ஓய்வு அரசு ஊழியர், அவரது மனைவி மீது வழக்கு

/

குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக கூறி நிலத்தை கிரையம் செய்து மோசடி ஓய்வு அரசு ஊழியர், அவரது மனைவி மீது வழக்கு

குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக கூறி நிலத்தை கிரையம் செய்து மோசடி ஓய்வு அரசு ஊழியர், அவரது மனைவி மீது வழக்கு

குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக கூறி நிலத்தை கிரையம் செய்து மோசடி ஓய்வு அரசு ஊழியர், அவரது மனைவி மீது வழக்கு


ADDED : ஏப் 08, 2025 05:06 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: நிலத்தின் பெயரில் குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக கூறி போடி எஸ்டேட் உரிமையாளர் கார்த்திகேயனிடம் 109 சென்ட் நிலத்தை பதிவு செய்து மோசடி செய்த போடி விஸ்வாசபுரம் ஓய்வு அரசு ஊழியர் சந்திரமணி, அவரது மனைவி ராமலட்சுமி மீது போலீசார் வழக்குப் பதிந்துவிசாரிக்கின்றனர்.

போடி ரெங்கநாதபுரம் கார்த்திகேயன் 56. எஸ்டேட் உரிமையாளர். இவரிடம் பழகியபோடி விஸ்வாசபுரம், பொதுப்பணித்துறை ஓய்வு ஊழியர் சந்திரமணி, அவரது மனைவி ராமலட்சுமி ஆகியோர் நிலத்தின் பெயரில், குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக கூறினர். இதனை நம்பிய கார்த்திகேயன் 2017 ஜனவரி 24ல் அவரது மனைவி மணிமேகலை பெயரில் உள்ள 47 சென்ட் நிலத்தை ரூ.18 லட்சத்திற்கும், 2017 அக். 9ல் கார்த்திகேயன் பெயரில் உள்ள 62 சென்ட் நிலத்தை ரூ.25 லட்சத்திற்கும், ராமலட்சுமி பெயரில் கிரையம் செய்து கொடுத்தனர்.

கார்த்திகேயன், அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் ஓய்வு ஊழியரிடம் வாங்கிய பணத்திற்கு ஆண்டு வட்டியாக 24 சதவீதம் வட்டி கொடுத்துள்ளனர்.

அசல், வட்டி முழுவதும் செலுத்தினால் கிரைய பதிவினை ராமலட்சுமி ரத்து செய்து, கார்த்திகேயனுக்கு நிலங்களை திரும்ப ஒப்படைப்பதாக சம்மதம் தெரிவித்து பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார். அதன்படி கார்த்திகேயன் 2021 வரை ஆண்டு வட்டியை செலுத்தினார்.

பின் அசல் தொகை ரூ.43 லட்சம் செலுத்திய கார்த்திகேயன், சந்திரமணியிடம் நிலத்தின் கிரைய பதிவை ரத்துசெய்து தருமாறு அழைத்தார்.

அதற்கு ராமலட்சுமி, சந்திரமணி இருவரும் கிரையத்தை ரத்து செய்ய வரமறுத்து கொலை மிரட்டல் விடுத்தனர்.

கார்த்திகேயன் தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் புகார் அளித்தார். மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி, எஸ்.ஐ., பாஸ்கரன் ஆகியோர், சந்திரமணி, ராமலட்சுமி மீதுமோசடி வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us