/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தொடர் மழை காற்றால் ஏலக்காய் மகசூல் பாதிக்கும் நிலை
/
தொடர் மழை காற்றால் ஏலக்காய் மகசூல் பாதிக்கும் நிலை
தொடர் மழை காற்றால் ஏலக்காய் மகசூல் பாதிக்கும் நிலை
தொடர் மழை காற்றால் ஏலக்காய் மகசூல் பாதிக்கும் நிலை
ADDED : அக் 17, 2024 06:21 AM
கம்பம்: இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் மழை, வீசும் காற்று காரணமாக ஏலக்காய் மகசூல் 60 சதவீதம் வரை பாதிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் மாலி, சாஸ்தா நடை, வண்டன் மேடு, சங்குண்டான், புளியன் மலை, வாழ வீடு, மேப்பாறை, மாதவன் கானல், ஆமையாறு, அந்நியார் தொழு, நெடுங்கண்டம், பூப்பாறை, பாரத்தோடு, வெங்கலப்பாறை, நரியம்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடியாகிறது.
பொதுவாக ஏலக்காய் பறிப்பு ஆகஸ்டில் துவங்கும். இந்தாண்டு செப்டம்பரில் துவங்கியது. தற்போது இரண்டாவது ரவுண்ட் காய் பறிப்பு நடந்து வருகிறது. ஆனால் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 60 சதவீதம் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னோடி விவசாயிகள் கம்பம் சங்கர், புதுப்பட்டி அருண்பிரசாத் உள்ளிட்ட பலர் கூறியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ''ஏல விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோடையில் நிலவிய கடும் வெப்பம் காரணமாக ஏலத் தட்டைகள் ஒடிந்து விழுந்தன.
அதன் பின் கடந்த ஒரு மாதமாக பெய்த மழை, வீசிய காற்று காரணமாக பிஞ்சுகள் உதிர்ந்து விட்டன.
இதனால் ஏலக்காய் மகசூல் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 60 சதவீதம் பாதிப்பு ஏற்படும். அதே சமயம் விலையும் குறைந்து கிடைக்கிறது. இதனால் இந்தாண்டு கடுமையான நஷ்டத்தை சந்திக்கும் சூழல் எழுந்துள்ளது.'', என்றனர்.

